மிர்தாதின் புத்தகம்
உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது “மிர்தாதின் புத்தகம்!”இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது…
மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது!
நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, மிகச் சிறந்த நூல் இது!
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது… இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்…. இப்புத்தகத்தை படைத்த “மிகைல் நெய்மி”யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல… எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர் என்றும் கூறுகிறார்….
ஸ்தம்பிக்கத்தான் வேண்டி இருக்கிறது.. நான் நானாகும் மிகச் சிறந்த தருணத்தை இப்புத்தகம் மிக நுண்ணிய பொழுதுகளில் தருவது…… கிடைக்கப் பெற்ற எதுவும் கிடைத்த பின் எதுவாகும் என்றொரு மாபெரும் கேள்வியோடு நான் அற்ற எதிர் நிலைக்குள் யார் அற்ற என் நிலையைத் தேடத் துவங்குவதற்கு நீட்டித்துக் கொள்கிறது. தன் அற்புத பக்கங்களின் அடுத்தடுத்த வரிகளின் ஊடாக நம்மை வியக்க வைக்கும் மாய தத்துவங்களின் நிதர்சனத்தை கடந்து விடும் முன்.. நிதானம்… இழக்காமல் இருப்பது அவசியம்..அத்தனை மூர்க்கமாக உங்களைத் தாக்கும்.. உண்மையின் வலிமை… மிகப் பெரிய சூட்சும அவிழ்த்தல்… அது அப்படித்தான்… தயாராகியே படியுங்கள்…. ஏக்கம் கொண்டவர்களே வெற்றி பெறுவார்கள் என்று பூதாகரமாகவே விரிகிறது மிர்தாதின் பக்கங்கள். பக்கங்களில் இருக்கும் சாரத்தின் விளிம்பை…..”மிகைல் நெய்மி”யின் பாரபட்சமற்ற பெருங் காற்று வனாந்தரத்தின் வாக்கிய அமைப்போடு…….’மிர்தாத்’ என்னருகே இருக்கிறார். நோவாவின்….சொல் பிடித்த அதற்கும் முந்தைய பெரு மழையின் யோசனையென புன்னகைத்துக் கொண்டே இருக்கிறார்…அது நம் மர்மங்களின் முகமூடி திறக்கும் அற்புத ஞானத்தின் திறவு… ஒளியின் சாராம்சம்.. நம்மை வந்தடைய செய்யும் மிகச் சிறந்த ஒப்பனை கலைதலின் வழி.
Reviews
There are no reviews yet.