வேல் தந்த்ரா
இலங்கை வேந்தன் ராவனேஸ்வரன் எழுதியதாக சொல்லப்படுகின்ற குமார தந்திர நூலை ஆதாரமாக கொண்டு, பல அபூர்வ சித்த ரகசியங்களை தொகுத்து ஸ்டார் ஆனந்த் அவர்கள் எழுதிய “வேல் தந்த்ரா” என்னும் அற்புத பொக்கிஷ நூல்
இந்த நூலில்
(1) சக்தி ஆயுதமாகிய அபூர்வ முருகப்பெருமானுடைய வேலின் மகத்துவம்,
(2) மிக பழைய வேலினுடைய தந்திர பூஜா முறைகள் , பூஜா விதிகள் ,
(3) சித்தர்கள் கூறிய வேல் ஆயுதத்தை அஸ்திரமாக பிரயோகிக்கும் அபூர்வ கார்ய மந்திரங்கள்,
(4) எதிர்ப்புகளை வெல்லும் சத்ரு சம்கார பூஜை வழிபாட்டு முறைகள்,
(5) பிரபஞ்ச சக்தியை நேரடியாக தொடர்பு கொள்ளும் அபூர்வ யோக முறைகள்,
(6) மாபெரும் வாசியோக ரகசியங்கள்…
இன்னும் எத்தனையோ முருக வேல் வழிபாட்டின் ரகசியங்களை அழகாக எழுதியுள்ளார்….
ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாக வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.
தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு.
வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூத உடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
“சரம்” என்றால் மூச்சு. “சரத்தை
வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்” என்பது இவரது தத்துவம். சரத்தை வசப்படுத்திக் காட்டியதால் “சரவணன்” என்ற
சிறப்புப் பெயரும் உண்டு.
மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது;
சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், “பெம்மான் முருகன் பிறவான்; இறவான்…” என்று அருணகிரி
நாதரால் பாடப் பெற்றார்.
அகத்தியர், போகர், ஒளவையார்,
அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள்
எந்த நாட்டிலும் இல்லை.
எனக்கு கிடைத்த மிக பெரிய சொத்துக்களில் இந்த “வேல் தந்த்ரா” நூலும் ஒன்று.
ஓம் சிவ சண்முக சிவ ஓம்
Reviews
There are no reviews yet.