அன்பு. உலகம் துன்பத்திலுமில்லை; ஆனந்தத்திலுமில்லை. நாம் எதைத் தேடுகிறோமோ அதுவே உலகமாகிறது. நமது பார்வைக் கோணம் நமது உலகமாகிறது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சொந்த உலகத்தை படைத்துக்கொள்கிறோம்.
வாழ்வின் ஒவ்வொரு கணமும் உனக்கு துன்பத்தைக் கொண்டு வந்தால், பின் எங்கோ ஓரிடத்தில் உனது பார்வைக்கோணத்தில் தவறுள்ளது, மேலும் உன்னைச்சுற்றி நீ பார்ப்பதனைத்தும் இருளாக இருந்தால், பின் நீ கண்டிப்பாக ஒளியைப் பார்க்கக்கூடிய அதே கண்களை நீ மூடிக்கொண்டுவிட்டாய்.
உன்னைச்சுற்றி திரும்பவும் சிந்தித்துப்பார். உன்னைப் புதிதாகப்பார். நீ மற்றவர்களைக் குறைகூறினால் உன்னுடைய சொந்த தவறுகளை உன்னால் தேடமுடியாது. நீ சூழ்நிலைகளை குறை கூறினால், உன்னுடைய மனம் நிற்கும் கோணத்தின் ஆழமான வேர்கள்வரை உன்னால் செல்லமுடியாது.
அதனால்தான் எந்தவிதமான சூழ்நிலையில் நீ இருந்தாலும், எப்போதும் காரணங்களை நீ முதலில் உனக்குள் தேடு. காரணங்கள் எப்போதும் தனக்குள்ளேயே கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவை எப்போதும் அடுத்தவர்களிடமிருப்பதாகவே தோன்றும். நீ இந்த தவறான புரிதலை தவிர்த்துவிட்டால் துன்பத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது கடினம்.
Reviews
There are no reviews yet.