மனிதனின் நிரந்தரத் தேடல்
பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு, ஒரு யோகியின் சுயசரிதத்தில் லட்சக்கணக்கானவர்களை ஈர்த்த பரந்த அளவிலான எழுச்சியூட்டும் மற்றும் உலகளாவிய உண்மைகளைப் பற்றிய விரிவான ஆய்வுரைகளை முன்வைக்கின்றன. பாகம் 1 — தியானம், மரணத்திற்குப் பின்னாலான வாழ்வு, படைப்பின் தன்மை, ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்துதல், மனத்தின் எல்லையற்ற ஆற்றல்கள் மற்றும் இறைவனிடம் மட்டுமே நிறைவைக் காணும் நிரந்தரத் தேடல் ஆகியவற்றைப் பற்றி சிறிது அறியப்பட்ட மற்றும் அபூர்வமாக புரிந்துகொள்ளப்பட்ட அம்சங்களை ஆராய்கிறது.
மனிதனின் நிரந்தரத் தேடல் புத்தகத்தின் சில அம்சங்கள்:
- தினசரி வாழ்க்கையில் இறைவனை உணர்வது குறித்த சொற்பொழிவுகள்
- மனித இனம் தனக்கு முழுமையான மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என நம்பும் ‘வேறு ஏதோ ஒன்றை’ நாடி நிரந்தரத் தேடலில் ஈடுபட்டிருப்பது குறித்த கட்டுரைகள்
- இறைவனை நாடி கண்டுகொண்ட அந்தத் தனி ஆன்மாக்களுக்கு, தேடல் முற்றுப்பெற்றுவிட்டது
- மனிதனின் நிரந்தரத் தேடலை இறைவன் பூர்த்தி செய்கிறார்
தினசரி வாழ்க்கையில் இறைவனை உணர்வதைப் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு பாகம்-1
மனித இனம் தனக்கு முழுமையானதும், முடிவற்றதுமான மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என தான் நம்புகின்ற அந்த ‘வேறு ஏதோ ஒன்றை’ நாடி நிரந்தரத் தேடலில் ஈடுபட்டிருக்கிறது. இறைவனை நாடி. கண்டுகொண்டுவிட்ட அந்தத் தனி ஆன்மாக்களுக்கு, தேடல் முற்றுப்பெற்றுவிட்டது: இறைவன் தான் அந்த வேறு ஏதோ ஒன்று.”
-ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்
பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் இத்தொகுப்பு, அவரது ஒரு யோகியின் சுயசரிதத்தில் கோடிக்கணக்கானோரை கவர்ந்திழுத்துள்ள மனவெழுச்சியூட்டுகின்ற மற்றும் அனைவருக்கும் பொருந்துகின்ற உண்மைகளின் பரந்த தொகுதியைப் பற்றிய ஆழ்ந்த விவாதங்களை வெளிப்படுத்துகிறது. வாசகர்கள், ஆன்மீக வாழ்க்கைக்கு நம் யுகத்தின் மிகவும் போற்றத்தக்க மற்றும் நம்பத்தக்க வழிகாட்டிகளில் ஒருவராக ஆசிரியரை ஆக்கியுள்ள அவரது அனைத்தையும் அரவணைக்கும் அறிவு, ஊக்கம் மற்றும் மனித இனத் திற்கான அன்பு ஆகியவற்றின் ஒப்பற்ற கலவை கொண்ட இந்த உரைகளை உயிருள்ளவையாகக் காண்பர்.
வாழ்க்கையின் புதிர்களை அறிந்து கொள்ள எப்பொழுதும் நாடுகின்ற பரமஹம்ஸ அனைவருக்கும், கடவுளின் நிஜத்தைப் யோகானந்தர் பற்றி உறுதியற்ற நம்பிக்கையை தங்கள் இதயங்களில் வைத்துள்ளோருக்கும், தங்கள் தேடலில் ஏற்கனவே பரம்பொருளை நோக்கி திரும்பிவிட்ட சாதகர்களுக்கும் இந்தச் சொற்பொழிவுகளின் உரைநடைத் தொகுப்பு, நடைமுறை வழிகாட்டுதலையும் ஒளியூட்டும் உட்பார்வை களையும் தருகிறது.
Reviews
There are no reviews yet.