யோகா, தியானம், உள்ளுணர்வு, சொர்க்கம்நரகம், மாந்திரீகம், பகுத்தறியும் மனம் – இவை பற்றி எல்லாம் யாராவது பேசிக் கேட்கும்போதோ அல்லது தேடிப் படிக்கும்போதோ, ஒரு நேரத்தில் புரிந்தது போலவும் இன்னொரு நேரத்தில் புரியாதது போலவும் இருக்கிறது. யாராவது தகுதியான ஒரு நபர், இவை பற்றி நமக்கு தெளிவாக விளக்க மாட்டார்களா என்னும் ஏக்கத்தில் இருந்த மக்கள், சத்குருவின் சத்சங்கங்களை கேட்கும்போது, பல வருட குழப்பங்கள் நீங்கி, இயல்பாகவே மகிழ்ச்சி அடைகின்றனர். அது போன்ற சத்சங்கங்களில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு சத்குருவின் தெளிவான பதில்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலைப் படிக்கப் படிக்க, உங்களின் நெடுநாள் குழப்பங்களும் கூட விடைபெற்று, உங்களிடமும் மகிழ்ச்சி வெளிப்படுவது நிச்சயம்.
புரிந்ததும் புரியாததும்
நம் அன்றாட வாழ்வில், நாம் கேட்டு, படித்து, பார்த்து புரிந்தவைகள் சில, புரியாதவைகள் பல. ஆனால் புரியாத பட்டியல்தான் நீண்டுகொண்டே இருக்கிறது. அப்படி நமக்கு புரியாதவைகளையும், புரிந்தவைகளில் உள்ள மற்றொரு கோணத்தையும் இந்த புத்தகத்தின் வாயிலாக நமக்கு விளக்குகிறார் சத்குரு…
நாம் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையா, இந்த உயிரின் எல்லைதான் என்ன என்று விடைகாணும் ஏக்கத்தில் நீங்கள் தேடும்போது, மறையியல், ஆன்மீகம், கடவுள், முக்தி, சொர்க்கம் – நரகம், மாந்திரீகம், மந்திரம், தர்க்கம், ஆழ்மனம், பகுத்தறியும் மனம், உள்ளுணர்வு, யோகா, தியானம், ஒருமை-இருமை, பற்று, ஆளுமை, முற்பிறவி, அமாவாசை-பௌர்ணமி, பிரபஞ்சம் என்றெல்லாம் அநேக சொற்கள் நம் முன் வந்து விழுகின்றன.
இந்த வார்த்தைகளும் அதற்கான விளக்கங்களும் எப்போதும் புரிந்தும் புரியாததுமாகத்தான் நமக்கு இருந்திருக்கிறது.
உண்மை என்பது ஒன்றுதான். ஆனால் அந்த உண்மையையும் எடுத்துச் சொல்லும் பாணி ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது. பள்ளி, கல்லூரிகளில் கூட ஒரே பாடத்தை ஒரு ஆசிரியர் நடத்தும்போது மாணவர்கள் ‘புரிகிறது’ என்கிறார்கள், வேறொரு ஆசிரியர் நடத்தும்போது, ‘சரியாக புரியவில்லை’ என்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.