இந்தப் புத்தகத்தின் நோக்கம் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை அப்படியே அடைய (ஆம், நீங்கள் அடைய) உங்களுக்குச் சொல்லித் தருவதுதான்.
இதை நன்றாகப் புரிந்துக் கொள்ளுங்கள்.
‘நீங்கள்’ என்று இந்தப் புத்தகம் குறிப்பிடும்போது அது உங்களையேதான் குறிப்பிடுகிறது. (ஆம், உங்களை.) இது ஒரு வெற்றிக்கு வழிகாட்டி. நீங்கள் விரும்பியதை அடைய உங்களுக்காகவே எழுதப்பட்ட புத்தகம்.
இந்தப் புத்தகம் உங்களுக்காக…
யாராக இருந்தாலும்… எங்கே வாழ்ந்தாலும்… என்ன வயதானவராக இருந்தாலும்… தோலின் நிறம் எதுவாக இருந்தாலும்… கல்வி நிலை இப்போதைக்கு எப்படிப்பட்டதாக இருந்தாலும் (கல்வியே இல்லாவிட்டாலும்)… பொருளாதார நிலை எப்படி இருந்தாலும்… வேலையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்… பணக்காரர் ஆயினும், நடுத்தர வருமானம் உள்ளவராயினும், அல்லது வறியவர் ஆயினும்… குப்பத்தில் வாழ்ந்தாலும், மாளிகையில் வசித்தாலும்… இந்தப் புத்தகம் உங்களுக்காகவே உள்ளது. (ஆம், உங்களுக்காகவே.)
இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். உங்கள் வெற்றியின் முதலீடு- நீங்களே. நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமா- விரும்பியவற்றை அடைய வேண்டுமா- எதுவானாலும் சரி- இந்நூல் உங்களை உங்கள் லட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்லும். நம்பிக்கையோடுதான் ஒவ்வொரு எந்த முதலீட்டையும் செய்வார்கள். இந்த முதலீட்டைச் செய்த நீங்கள் உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று நிரூபிக்கிறீர்கள். முதல் படியில் நீங்கள் ஏறியாகிவிட்டது. உங்கள் லட்சியத்தை நோக்கி நீங்கள் முன்னேறத் தொடங்கியாகிவிட்டது. இந்நூல் எப்படி உங்கள் இலக்கை அடைய முடியும் என்று வழிகாட்டும் ஓர் அதிசயப் பெட்டகம்.
Reviews
There are no reviews yet.