பெரியவர்களின் நோக்கங்கள், எண்ணங்கள் மற்றும் செயல்கள், குழந்தைகளின் இதயங்களால் உள்ளீர்த்துக் கொள்ளப்படுகின்றன. குழந்தைகள், விரைவாகக் கவனித்து, உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள். அவர்கள் நிறைவான வாழ்க்கையை வாழும் வகையில், வழிகாட்டிப் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பும் பெரியவர்களுக்கு உள்ளது. ‘த விஸ்டம் பிரிட்ஜ்’ புத்தகத்தில், உங்கள் குழந்தைகளும் அன்புக்குரியவர்களுக்கும் ஊக்கம் பெறும் வகையிலான வாழ்க்கையை வாழ்வதற்கு வழிகாட்ட உதவும் ஒன்பது கோட்பாடுகளை தாஜி வழங்குகிறார். இவை உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்கும், அவர்களைப் பொறுப்புள்ள பருவ வயதினராக வளர்ப்பதற்கு உதவுவது மட்டுமின்றி, வாழ்க்கையை உத்வேகம் நிறைந்ததாக, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து சூழல்களை எதிர்கொள்ளும் மீள்திறன் கொண்டவர்களாக இருப்பதற்கும் வழிவகுக்கிறது.
Reviews
There are no reviews yet.