தந்த்ரா சொல்கிறது உனது இயற்கை நல்லது: பாலுணர்வு நல்லது; அதனிடம் உண்மையாயிரு. அதனுள் போ. வாழ்விலும் உணர்விலும் ஆர்வம் கொண்டவன் தானாகவே பாலுணர்விலும் ஆர்வம் கொள்வான் ஏனெனில் பாலுணர்வே வாழ்வின்அன்பின் பிறப்பிடம். ஆனால் தந்த்ரா நீ அதிலேயேகிடக்கஉதவுவதுஅல்ல.அதைமாற்றுவதற்கானது எனவே உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே. தந்த்ரா சொல்லுகிறது. எதையும் எதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
தந்த்ரா சொல்கிறது, உயிர்த்துடிப்போடிரு. அதிக உயிர்த்துடிப்பு கொள். ஏனெனில் வாழ்வே கடவுள். வாழ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அதிக உயிர்த்துடிப்போடிரு, அப்போது நீ அதிக தெய்வீகமாயிருப்பாய்.முழுமையாக உயிர்த்துடிப்பு கொள், அப்போது உனக்கு அங்கு இறப்பு இல்லை. தந்த்ரா வாழ்வை இயற்கையாக எடுத்துக்கொள்ளச் சொல்கிறது. பொய்யாக இருக்காதே. பாலுணர்வு அங்கு ஒரு ஆழமான சாத்தியக் கூறாக, ஒரு மாபெரும் ! வாய்ப்பாக இருக்கிறது. அதைப் பயன்படுத்து! மேலும் அதில் ஆனந்தமாய் இருப்பதில் என்ன தவறு! நிஜத்தில் எல்லா நெறிமுறைகளுமே ஆனந்தத்திற்கு எதிராக உள்ளன,
Reviews
There are no reviews yet.