ஓஷோ நூல்கள் எழுத்து வடிவம் அல்ல. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, முன் தயாரிப்பு ஏதும் இல்லாமல், அவர் அருவியாய் பொழிந்த பேச்சு ஒலி நாடாக்களிலும், வீடியோவிலும் பதிவாகியுள்ளது. அவற்றின் தொகுப்பு தான் இப்போது புத்தகங்களாக வெளிவருகின்றன. இருபதாம் நூற்றாண்டை உருவாக்கிய 1000 சிற்பிகளில் ஒருவர் ஓஷோ என்று புகழாரம் சூட்டுகிறது லண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் இதழ்.
பல ஆசைகள் சேர்ந்த ஒரு கூட்டமே மனம்.அது ஒரே ஒரு ஆசையல்ல.மனம் எண்ணற்ற மனங்களையுடையது.அது எல்லாக் கூறுகளும் பல்வேறு திசைகளில் விலகி வீழ்கின்றன.எப்படி நாம் ஒன்றாக செயல்படுகிறோம் என்பதே ஒரு அதிசயம் தான். ஒருவன் ஒன்றாக இருப்பதே பெரும் போராட்டம்தான்.எப்படியோ நாம் சமாளிக்கிறோம்.ஆனால் போராட்டமாய்தான் இந்த ஒற்றுமை நீடிக்கிறது.அடி ஆழத்தில் பெரும் குழப்பம் தான்.நீங்கள் ஒரு பெண்ணைக் காதலிக்கிறீர்கள்.நீங்கள் அவளைக் காதலிக்கிறீர்கள் என்று நிச்சயமாகத் தெரியுமா? உண்மையாகத் தெரியுமா?உண்மையாகவே நிச்சயமாகவே இருக்கும் ஒரு காதலனை நான் இதுவரை கண்டதே இல்லை.உங்களுக்கு திருமணம்கூட ஆகிவிடலாம்.ஆனால் நிச்சயமாக இருக்கிறீர்களா?உங்களுக்குக் குழந்தைகள் பிறக்கலாம்.ஆனால் உங்களுக்கு குழந்தைகள் வேண்டுமென்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா?இப்படித்தான் நீங்கள் வாழ்கிறீர்கள்.எதுவுமே நிச்சயம் இல்லை.ஆனால் நீங்கள் இதையோ அல்லது எதையோ வெய்து உயிர் வாழ்கிறீர்குள்.ஆனால் நிச்சயமான தன்மை மனதில்இருப்பதில்லை என்றுமே இருக்காது.அதே பிரச்சனை ஒவ்வொரு அடியிலும் வரும் அதே பிரச்சனை மறுபடியும் உங்களை எதிர்கொள்கிறது.
Reviews
There are no reviews yet.