குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் இளைய சகோதரி பானுமதி நரிசிம்மன். முதலில் குழந்தைத்தனமாகவும் பின்னர் ஒரு விதமான மகிழ்ச்சி கலந்த புரிதலுடன், தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய சகோதரர், தன்னுடை குருவை பின்பற்றிவந்துள்ளார். இந்தப் புவியில் அனைவரது முகத்திலும் புன்னகை மலர வேண்டும் என்ற தன் சகோதரரின் கொள்கையை, ஆசையை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் பானுமதி நரசிம்மன். இவருடைய வொர்க்ஷாப்கள் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கானோரின் ஆழ்மனதில் நிம்மதி என்ற அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. பானுமதி வாழும் கலையின் மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் மேன்மை தொடர்பான விஷயங்களை முன்னடத்திச் செல்கிறார். கட்டிட தொழிலாளர்களின் முப்பது குழந்தைகளுடன் ஒரு சாதாரண சிறிய இலவச பள்ளியாக துவங்கிய கிஃப்ட் ஏ ஸ்மைல் என்ற திட்டம் தற்போது சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட 58,000 குழந்தைகள் படிக்கும் 435 பள்ளிகளை ஆதிரிக்கிறது. சர்வதேச மகளிர் மாநாட்டின் தலைவராக, அவருடைய கனவு உலகம் முழுவதிலிருந்தும் பொறுப்புள்ள பெண்களை ஒருங்கிணைத்து சமுதாயத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவருவதில் பெரும் பங்காற்ற வேண்டும் என்பதேயாகும்.
Reviews
There are no reviews yet.