பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய நீடித்து நிலைக்கும் ஆன்மீக இலக்கியத்தின் ஒரு விரிவான மேலோட்டம்.
2021 -ஆம் ஆண்டு, உலகின் மிகவும் போற்றப்படும் ஆன்மீக இலக்கியங்களின் ஒன்றான பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய ஒரு யோகியின் சுய சரிதம் என்ற நூலின் 75-வது ஆண்டு நிறைவடைந்த முக்கிய நிகழ்வைக் குறிக்கிறது.
பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை வரலாற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். இந்த நூல் உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் மனங்களையும் கவர்ந்துள்ளது. ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்த நூல் எண்ணற்ற வாசகர்களை இந்தியாவின் பழம்பெரும் யோக அறிவியலுக்கும் உலக நாகரிகத்திற்கு இந்தியாவின் தனிச்சிறப்புவாய்ந்த மற்றும் அழியாத கொடையாக விளங்கும் இறை-அனுபூதியை அடைவதற்கான அறிவியல்பூர்வ வழிமுறைகளுக்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
1946-ல், முதன் முதலாக அச்சிற்கு வந்த நாள்தொட்டே, தலைசிறந்த படைப்பு என்று பாராட்டப் பெற்ற இந்த சுயசரிதம் தொடர்ச்சியாக சிறப்பாக விற்பனையாகும் ஆன்மீக நூல்களின் வரிசையில் இருந்து வருகிறது மற்றும் பல்வேறு மார்க்கங்களின் ஆன்மீக ஆர்வலர்களால் வாசிக்கப்பட்டிருக்கிறது. 1999-ல், “நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களில்” ஒன்றாகக் கெளரவிக்கப்பட்டது.
தொடர்ச்சியான மற்றும் பெருகும் ஆர்வத்தின் காரணமாக, இந்த நூல் 15 முக்கிய இந்தியத் துணைக்கண்ட மொழிகளிலும் உலகம் முழுவதிலும் 50க்கும் மேலான மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு யோகியின் சுயசரிதம் (பரமஹம்ச யோகானந்தர்)
இப்புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை ஊடுருவுகினற் மறக்க இயலாத நோக்கும், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவருடைய கவர்ந்திழுக்குமு் வாழ்க்கை வரலாறும் ஒருங்கே கொண்டதாகும். நவீனகலால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தி ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாராய்வு செய்வதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை வாழ்நாளின் மிகச் சிறந்த உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத் தெரிவிக்கின்றனர். ஆங்கிலத்திலோ அல்லது பிற எந்த ஐரோப்பிய மொழிகளிலோ யோகம் பற்றிய இது போன்ற படைப்பு இதற்கு முன்னர் இருந்ததே இல்லை. மனது மற்றுமு் ஆன்மாவின் ஜன்னல்ளைத் திறக்கும் புத்தகம்.
Reviews
There are no reviews yet.