1984-ஆம் ஆண்டிலிருந்து ஓஷோ நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு இந்த நூல். “நான் ஒரு போதகரல்ல; காதலன்’ எனக் கூறும் ஓஷோ, வாழ்வியலின் தத்துவங்களையும், நெறிகளையும், பிரார்த்தனைகளின் வலிமையையும் எளிய மொழியில் வசீகரமாக விளக்கியுள்ளார்.
உலகில் 300-க்கும் மேற்பட்ட மதங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் ஏற்றுக்கொண்ட ஒற்றைச் சொல்லாக “ஓம்’ என்ற மந்திரம் இருப்பதாகக் கூறும் அவர், அதற்கான காரணத்தையும் எடுத்துரைத்திருக்கிறார். அதனால், “ஓம்’ என்பதுதான் மனிதன் உச்சரித்ததிலேயே என்றும் மிக முக்கியமான ஒலி எனவும் அவர் நூலில் குறிப்பிடுகிறார்.
“சமூகத்தையும், பிறரையும் பொருள்படுத்த வேண்டாம்’ என்ற ஓஷோவின் வார்த்தைகள், இந்தத் தலைமுறையினர் கட்டாயம் கவனிக்க வேண்டிய கருத்து. நீங்கள் நீங்களாகவே இருக்கும்போது அங்கே உண்மை இருக்கிறது; அழகு இருக்கிறது; கருணை இருக்கிறது; பேரானந்தம் இருக்கிறது என்ற தத்துவத்தை அவர் முன்வைக்கிறார். ஆளுக்கு தகுந்தாற்போல் அவதாரம் தரிக்க வேண்டிய அவசியம் மனிதனின் வாழ்க்கைக்கு இல்லை என்பது அவர் காட்டும் நெறி.
Reviews
There are no reviews yet.