இமயத்தின் இரகசியங்கள்
ஒவ்வொரு வருடமும் சத்குருவுடன் இணைந்து ஈஷா தியான அன்பர்கள் குழு இமயமலை பயணத்தை மேற்கொள்ளும். இமயமலைகளில் நிறைந்துள்ள அற்புதங்களை அறியச் செய்யும் இந்தப் புத்தகம், இமாலய யாத்திரை செல்லும் ஆர்வத்தை தூண்டுகிறது!
ஆன்மீகத் தேடல் உள்ளோர் ஏன் இமயமலையைத் தேட வேண்டும்? அப்படி அங்கு என்னதான் இருக்கிறது? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யோகிகள் செய்து வரும் ஆன்ம சாதனைகளால், நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட பல ரகசியங்களை இமயம் தன்னுள் புதைத்து வைத்துள்ளது. அத்துடன் இன்றி, நடுங்கும், குளிரிலும் உடலில் ஆடை இல்லாது நடந்து செல்லும் சாதுக்கள் ஓர் அதிசயம். குப்தகாசி-கேதாரம் போன்ற மலை முகடுகளில் பொதிந்துள்ள , மறைஞானம் ஓர் அதிசயம். இமயத்திற்கும் ஈஷாவிற்குமான பூர்வஜென்மத் தொடர்புகள் ஓர் அதிசயம்.. இப்படித் தொடரும் பல ரகசியங்களுக்கான விடைகளை ‘சத்குரு இப்புத்தகத்தில் வெளிப்படுத்துகிறார். இமயத்தின் மீது தீராக் காதல் கொண்ட சத்குருவுடன், இப்புத்தகம் வாயிலாக பயணம் செய்யும் அனுபவம் நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இமயத்தின் ஆழத்தை உணரச் செய்யும் இப்புத்தகம், அதன் அழகை வெறுமனே கண்டு ரசித்து எழுதிய, பதிவுகள் அல்ல, ஆழம் வரை உணர்ந்து இமயத்தின், அதிர்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஞானப் பெட்டகம்!
Reviews
There are no reviews yet.