திருமாற்றம் தரும் திருவண்ணாமலை
ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே!
நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருத்தலம் திருவண்ணாமலை ஆகும் திருவண்ணாமலையின் சூட்சமமான வழிமுறைகளை பலரது வாழ்வில் மாற்றங்களும் முன்னேற்றங்களும் அதிசயங்களும் ஆற்றல்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
மகத்துவம் வாய்ந்த இந்த திருவண்ணாமலையில் எனக்கு நிகழ்ந்த பேர் அனுபவங்களை சூட்சுமமான முறையில் கதை வடிவில் இதில் பகிர்ந்து கொள்கின்றேன்.
இப் புத்தகத்தை படிக்கும் நீங்கள் படிப்பது வாயிலாகவே திருவண்ணாமலையை வலம் வருவதாக நிச்சயம் உணர்வீர்கள். திருவண்ணாமலையில் நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் குருவருளை திருவருளையும் உங்களுக்கு மலரும் அற்புத வாய்ப்பை பெறுமாறு இப்புத்தகத்தை உருவாக்கியுள்ளேன்.
நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நம் நாயகன் உரைக்கும் வார்த்தைகளாக என்று நம் முன்னோர்கள் வாக்குப்படி அந்த நாயகன் பல்வேறு சூட்சும ரகசியங்களை என்னுள் தந்ததை நான் இங்கு எழுத்துப்பூர்வமாக பதிவு செய்துள்ளேன்.
எனவே இதிலுள்ள ஒரு எழுத்து மட்டுமல்ல ஒரு புள்ளி கூட எனக்கு உரிமையானது அல்ல இது எல்லாம் வல்ல ஈசனின் திருவடியில் சரணாகதி செய்கின்றேன்.
இப் புத்தகத்தை படிக்கும்போது திருவண்ணாமலையை பொறுமையாக ஆனந்தமாக உங்கள் குரு உடன் பயணிக்கும் பேர் அனுபவத்தை பெறுவீர்கள் எப்படி கிரிவலம் செல்லும்போது உங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் தடைகள் குழப்பங்கள் செல்வங்கள் யாவும் விழுகிறதோ அதே உணர்வு இதை படிக்கும் போது நிச்சயமாக ஏற்படும் என் வாழ்வே சூனியமாகி மரணத்தின் விளிம்பில் நிற்கும் ஒருவன் கையில் இப்புத்தகம் இருந்தால் அவன் மரணம் விளக்கப்பட்டு புது பிறப்பெடுத்து ஆனந்த வாழ்வு மலரும் ஜோதி வடிவன திகழும் அருணாச்சலேஸ்வரர் புதுவாழ்வை அவர்கள் துவக்கி வைப்பார்.
திருவண்ணாமலையின் அனுபவத்தை இப்புத்தகத்தின் வாயிலாக படித்து உணர்ந்து கொள்ளுங்கள்!
Reviews
There are no reviews yet.