பணம் பெருக்கும் பைரவர்
பைரவ வழிபாடுகளில் சிறந்தது சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு. இவர் அமர்ந்த நிலையில் தன் மடியில் பைரவியை அமர்த்திக் கொண்டு ஒரு கரத்தில் அமுத கலசமும் ஒரு கரத்தில் சூலமும் கொண்டு வைர கிரீடமும் பட்டு வஸ்திரமும் அணிந்து தம்பதி சமேதராக காட்சி தருகின்றார் இவரை அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் வணங்கினால் சகல சம்பத்தும் பொன் பொருளும் கிட்டும். பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும் நல்லருள் கிட்டும்.
இலுப்பை எண்ணெய் விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள் செல்வம் கிட்டும் தாமரை மலர் மாலை வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள் அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராட்சம் என்று காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.
தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வடைமாலை சாற்றி செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும் நாயிற்று கிலமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.
இவரை வழிபாடு செய்வதால் வறுமை பகைவர்களின் தொல்லைகள் பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் தன லாபமும் வியாபார முன்னேற்றம் பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம் நம்பிக்கையுடன் பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர் பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள் தினமும் பைரவர் காயத்ரியையும் பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும் வெல்லம் கலந்த பாயசம் உளுந்து வடை பால் தேன் பழம் வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.
சொர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும் வெள்ளிக்கிழமை திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும் தன விருத்தியையும் அடைவார்கள் பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும்.
இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம் நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம் ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும் கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.
சித்திரை – பரணி, ஐப்பசி-பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாள்கள் ஆகும் ஏனெனில் பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார் எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமாகும் பலன் அதிகம் கிடைக்கும்.
Reviews
There are no reviews yet.