பதின்மூன்று படிகள் வகையறாக்களில் இது இரண்டாவது புத்தகம். இதில் பிரபல ஆசிரியர் அஷ்வின் சாங்கியும் இணை ஆசிரியர் சுனில் தலாலும், ஆங்கிலப் பழமொழி சோல்வது போல ஒருவர் வெள்ளி ஸ்பூனுடன் பிறக்காவிட்டாலும் (பிறவியிலேயே பணக்காரர் ஆக இல்லாவிட்டாலும்) கூட, எவ்வாறு செல்வந்தராக முடியும் என்பதை அலசுகின்றனர்.
செல்வத்தைப் பற்றிய புரட்சிகரமான, புதுப்பார்வை செலுத்திய இவர்கள், செல்வத்தை நோக்கிய பயணம் கடினமானதாக இருப்பினும், அது அப்படி ஒன்றும் அடைய முடியாத ஒன்றாக இல்லை என்பதைக் காட்டியுள்ளனர். தீர்க்க எண்ணத்துடனும் முயற்சியுடனும் செல்வம் யாரும் அடையத் தக்கதே.
வற்றாத நற்செல்வம் ஈட்டும் 13 வழிகள் சுலபமாக மேற்கொள்ளத் தக்கவையே, உங்களுடைய கவனமும் நம்பிக்கையும் தவிர அதற்கு வேறெதுவும் தேவை இல்லை.
கருத்தைக் கவரும் உதாரணங்கள், அறிவு ஒளியூட்டும் கதைகள், நேரடி மெ அனுபவங்கள், மற்றும் பகுத்தறிவு பொருந்திய எண்ணங்கள் முதலியவற்றின் மூலமாக, இந்நூலாசிரியர்கள் செல்வத்தைப் பற்றிய மிகை எண்ணத்தையும் இரகசியத்தையும் கிழித்தெறிந்து, ஒருவர் எவ்வாறு செல்வம் ஈட்ட முடியும் என்பதை விளக்கி உள்ளனர்.
உலகத்தின் மிகை நிகர சொத்துக்காரர்கள், செல்வத்தைப் பாரம்பரியமாகப் பெறுவதற்குப் பதில், ‘தாங்களே எவ்வாறு செல்வத்தைப் படைத்துள்ளனர்’ என்பது நன்கு காட்டப்படுகிறது. நீங்களும் அவ்வாறு செய முடியும் என்பதை இச்சிறிய புத்தகத்தைப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்!
Reviews
There are no reviews yet.