தாஜி என பலராலும் அறியப்படும் கம்லேஷ் படேல் அவர்கள், பண்டைய பாரம்பரியத்தின் மெயான குரலாக ஒலிக்கிறார். உலகின் மாபெரும் ஆன்மீக மரபுகள் மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களின் மீது அவருக்குள்ள மதிப்பையும், அவற்றை ஆழ்ந்து ஆராயும் இயல்பையும் அவரது போதனைகள் பிரதிபலிக்கும் அதே வேளையில் அவை இதயநிறைவு பாதையின் மூலமாக அவர் பெற்ற சோந்த அனுபவத்திலிருந்து தோன்றியவையாகவும் உள்ளன.
ஒரு நூற்றாண்டு கால பழமை வாந்த ஆன்மீக பாரம்பரியத்தில் தோன்றிய குருநாதர்களின் பிரதிநிதியாக அறிவிக்கப்படுவதற்கு முன், அவர் 30 ஆண்டுகளாக நியூயார்க் நகரில் மருந்தாளுநராக பணியாற்றினார். நவீன கால குருவிற்கான கடமைகள் பலவற்றை நிறைவேற்றி, அனைத்து இடங்களிலும் உள்ள ஆன்மீக ஆர்வலர்களுக்கு அவர் ஆதரவு அளித்து வருகிறார்.
ஆன்மீகத்தைப் பற்றி தான் அறிந்ததை உண்மையாக வெளிப்படுத்தும் ஒரு மாணவராக திகழும் இவர், உணர்வுறுநிலை மற்றும் ஆன்மீகத் துறையில் அறிவியல் முறைப்படி ஆராந்திட தனது நேரம் மற்றும் ஆற்றலின் பெரும் பகுதியை செலவிடுகிறார். நடைமுறைக்கு ஏற்ற இந்த அணுகுமுறையானது இத்துறையில் அவரது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தினால் விளைந்த ஒன்றாகும்.
உறவுகள், தொழில், சோத்து, உடல்நலம் என பலவகையான தேவைகளுக்காக நாம் திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கும்போதும், பல நேரங்களில் நாம் வெறுமையையும், நமது உண்மையான சுயத்திலிருந்து விலகிவிட்ட உணர்வையும் அடைகிறோம். ஒரு கிரகம், பல சூரியன்களை சுற்றிவர முடியுமா? அதுபோன்று நம் வாழ்க்கையில் நமக்கு பல மையங்கள் இருப்பினும், ஒவ்வொரு இதயத்தின் நடுவிலும் இருக்கும் மிக ஆழமான அந்த உண்மையான மையம் எங்கே?
ஒரு மாணவனுக்கும், ஆசிரியருக்கும் இடையிலான ஆன்மீகத் தெளிவூட்டும் உரையாடல்களின் மூலம் தாஜி அவர்கள் இதயநிறைவு வழிமுறையின் கோட்பாடுகள் மற்றும் தத்துவத்தை, இதயநிறைவு வழிமுறையை பயிற்சி செபவரும், பயிற்சி அளிப்பவருமான ஜோஷுவா போல்லாக்கிற்கு வெளிப்படுத்துகிறார். இப்புத்தகம், பிரார்த்தனை மற்றும் யோகப் பிராணாஹுதியின் சாராம்சத்தில் தொடங்கி நடைமுறை குறிப்புகளின் வாயிலாக தியானத்தை தெளிவுபடுத்துதல் வரை நம்மை சிந்திக்க வைக்கிறது. இது நமது புலன்களின் வரையறைகளைக் கடந்து வாழவும், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணையவும் வழி வகுக்கிறது. இதயநிறைவு வழிமுறையை பயிற்சி செவது என்பது தோற்றத்தைக் கடந்து சாராம்சத்தை நாடுவதாகும், சடங்குகளுக்குப் பின்னால் இருக்கும் சத்தியத்தை நாடுவதாகும். இது நம்மை நமது இதயத்தின் ஆழத்தில் மையப்படுத்தி அங்கிருக்கும் உண்மையையும், நிறைவையும் கண்டறிய உதவும்.
Reviews
There are no reviews yet.