நூல் அறிமுகம்
இராமராஜ்யம். உன்னத தேசம்.
ஆனால், மகோன்னதத்திற்கும் ஒரு விலை உண்டு.
அந்த விலையைக் கொடுத்தது அவன்.
இந்தியா, கி மு 3400
பிரிவினையால் பாழ்பட்டுக் கிடக்கிறது அயோத்யா. யுத்தத்தின் கொடூரம் அதன் உயிர்ச்சக்தியை உறிஞ்சியெடுத்துவிட்டது. ஆழமாய் ஊடுருவியுள்ளது, இச்சிதைவு. தோற்றோர் மீது ஆட்சியைச் சுமத்தவில்லை அரக்க மன்னன், இலங்கை மன்னன் இராவணன். இல்லை; வர்த்தகத்தைச் சுமத்துகிறான். சாம்ராஜ்யத்தினின்று செல்வம் வாரியெடுத்துச் செல்லப்படுகிறது; ஏழ்மை, ஊழல், மனச்சோர்வு எனத் துன்புறுகின்றனர், சப்தசிந்து மக்கள். கொடும் புதைகுழியான இந்த வாழ்க்கையினின்று மீட்க ஒரு தலைவன் வர மாட்டானா எனக் கதறுகின்றனர்.
அவர்கள் தேடும் தலைவன், அவர்களிடையேதான் இருக்கிறான் என்பதை உணர்ந்தவர் யாருமில்லை. அவனை அவர்கள் அறிவர். சமூகம் விரட்டியடித்த புண்பட்ட இளவரசன். அவர்கள் உடைக்க முயன்ற இளங்கோ. இராமன். வாட்டியெடுப்பது தன் மக்களேயாயினும், நாட்டின் மீது அவனுக்குள்ள பற்று குறையவில்லை. சட்டத்தின் பக்கம் அவன் மட்டுமே. இருள் போல் சமூகத்தைச் சூழும் அவலத்தை, சீரழிவை எதிர்ப்பது அவனும், சகோதரர்களும், மனைவி சீதாவும் மட்டுமே.
சமூகம் சுமத்தும் அவக்கேட்டை மீறி உயர முடியுமா இராமனால்? சீதாவின் மீதுள்ள காதல், ஆழிப்பேரலையாய் மூழ்கடிக்கப் போகும் போராட்டத்தினின்று மீட்குமா? இளம்பருவத்தை இரக்கமின்றி அழித்த அரக்க மன்னன் இராவணனை வீழ்த்த முடியுமா அவனால்? விஷ்ணுவுக்கேயுரிய பிறவிப்பயனை இராமனால் நிறைவேற்ற முடியுமா?
Reviews
There are no reviews yet.