பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய நீடித்து நிலைக்கும் ஆன்மீக இலக்கியத்தின் ஒரு விரிவான மேலோட்டம்.
2021 -ஆம் ஆண்டு, உலகின் மிகவும் போற்றப்படும் ஆன்மீக இலக்கியங்களின் ஒன்றான பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய ஒரு யோகியின் சுய சரிதம் என்ற நூலின் 75-வது ஆண்டு நிறைவடைந்த முக்கிய நிகழ்வைக் குறிக்கிறது.
பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை வரலாற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். இந்த நூல் உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் மனங்களையும் கவர்ந்துள்ளது. ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்த நூல் எண்ணற்ற வாசகர்களை இந்தியாவின் பழம்பெரும் யோக அறிவியலுக்கும் உலக நாகரிகத்திற்கு இந்தியாவின் தனிச்சிறப்புவாய்ந்த மற்றும் அழியாத கொடையாக விளங்கும் இறை-அனுபூதியை அடைவதற்கான அறிவியல்பூர்வ வழிமுறைகளுக்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
1946-ல், முதன் முதலாக அச்சிற்கு வந்த நாள்தொட்டே, தலைசிறந்த படைப்பு என்று பாராட்டப் பெற்ற இந்த சுயசரிதம் தொடர்ச்சியாக சிறப்பாக விற்பனையாகும் ஆன்மீக நூல்களின் வரிசையில் இருந்து வருகிறது மற்றும் பல்வேறு மார்க்கங்களின் ஆன்மீக ஆர்வலர்களால் வாசிக்கப்பட்டிருக்கிறது. 1999-ல், “நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களில்” ஒன்றாகக் கெளரவிக்கப்பட்டது.
தொடர்ச்சியான மற்றும் பெருகும் ஆர்வத்தின் காரணமாக, இந்த நூல் 15 முக்கிய இந்தியத் துணைக்கண்ட மொழிகளிலும் உலகம் முழுவதிலும் 50க்கும் மேலான மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.