Product Details
ஆண், பெண் இடையிலான உறவு முறைக்குள் இருக்கின்ற எதிர்பார்ப்புகளை, அவர்கள் தேவதைகளையும் கடவுளையுமே திருமணம் செய்து கொண்டால்கூட அவர்களாலும் நிறைவேற்ற முடியாது, தோற்றுப்போவார்கள். உங்களது இயல்பான தன்மையே மகிழ்ச்சியாக இருக்குமானால், உறவுகள் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் இருக்குமே தவிர, மகிழ்ச்சியைத் தேடி இருக்காது. உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு நீங்கள் அடுத்தவரிடமிருந்தும் அவர் உள்ளங்களில் இருந்தும் மகிழ்ச்சியைப் பிழிந்தெடுக்க முனைந்தால், சிறிது காலத்திற்குப் பிறகு உறவுகள் துன்பம் ஏற்படுத்துவதாகத்தான் இருக்கும். எங்கே ஈடுபாடு இல்லையோ, அங்கே வாழ்க்கைக்கான வாய்ப்பே இல்லை. வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருக்க நீங்கள் விரும்பினால், ஏன் வாழ முயற்சிக்க வேண்டும்? பிறகு வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும்? இறந்துபோய் விடுங்கள், உங்கள் நோக்கம் நிறைவேறிவிடும். பிரபஞ்சத்தின் பொருள்தன்மையிலான இயக்கங்களிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டால், பின்னர் உங்கள் வாழ்வில் அருள் வெடித்து எழும். அருள் என்பது உங்களை நோக்கி வரவேண்டும் என்பதல்ல, அதைப் பெறுகிற தன்மை உடையவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளவேண்டும்.
Reviews
There are no reviews yet.