மரணம்: சொல்லபடாத ரகசியங்கள்
“மரணம் என்பது வாழ்வின் அடித்தளம். இறப்பை புரிந்துகொள்ள முடியாவிட்டால்,ஒருபோதும் உங்களால் வாழ்க்கையை புரிந்துகொள்ள முடியாது, வாழ்க்கையை கையாளவும் முடியாது. ஏனென்றால் வாழ்வு-இறப்பு இரண்டும் உள்மூச்சு-வெளிமூச்சு போன்றவை, பிரிக்க முடியாதபடி இணைந்தே இருக்கின்றன.”
பாவம் மரணம், அதற்குத்தான் எவ்வளவு கெட்ட பெயர்! அபச்சாரம், அபசகுணம், அமங்கலம்… இன்னும் எவ்வளவோ, அது உங்களுக்கே தெரியும்.
பாவம் மரணம், அதற்குத்தான் எத்தனை எதிர்ப்பாளர்கள்! இன்று பலரும் மரணம் எனும் சொல்லை ஒரு கெட்டவார்த்தையாகத்தான் பாவிக்கிறார்கள். உலகத்தின் பெரும்பாலான சமூகங்களில் மரணத்தைப் பற்றி உரையாடுவது தடைசெய்யப்பட்டதாகவே இருக்கிறது. வழக்கமாக வீடுகளில் நடக்கும் பேச்சுகளில் யாராவது தப்பித்தவறி ‘சாவு’ என்ற வார்த்தையை உச்சரித்து விட்டால்கூட அந்தச் சூழ்நிலையே மாறிவிடும். மரணம் என்ற சொல்லை பயன்படுத்தாவிட்டால் அது தங்கள் வீட்டிற்கு வராது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.
இவர்களின் பயம் எல்லாம் முற்றிலும் தேவையற்றதோ? மரணத்தை ஆரம்பத்திலிருந்து நாம் முற்றிலும் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோமா? நமக்கு நிகழப்போகும் பாதகமாக அதைத் தவறாக சித்தரித்து விட்டார்களோ? ஒருவேளை மரணம் பற்றிய விளம்பரங்கள் எல்லாம் போலியாக இருந்தால்? நாம் பிறவிக் கடலைக் கடந்து விடுபட வாய்ப்புகள் நிறைந்த வாயிலாக மரணம் அமைந்திடுமோ?
மரணத்தைப் பற்றி அறியப்படாத, அவசியம் அறியவேண்டிய, மர்மமான, பிரமிக்க வைக்கும் ஏராளமான விஷயங்களை இங்கு பகிரங்கமாகவும், எளிமையாகவும் விளக்குகிறார் சத்குரு.
ஒன்றை உள்ளது உள்ளபடியே புரிந்து தெளிந்துவிட்டால் பயம் மறைந்துவிடுகிறது. புரியாத வரை மட்டுமே பயம், எதிர்ப்பு எல்லாம். தெளிவு கிடைத்தால் விடுதலையே!
ஆத்திகர், நாத்திகர், பக்தர், பகுத்தறிவாளர், ஆன்மீகத்தில் பழுத்தவர், ஆன்மீகமே அறியாதவர் என யாராக இருந்தாலும், எந்த பேதமும் இன்றி, ஒருநாள் இறக்கப்போகும் அனைவருக்குமான புத்தகம் இது.
Reviews
There are no reviews yet.