100 ஜென் கதைகள் (ஆசிரியர் : சுவாமி ஆனந்த் பரமேஷ்)
நான் ஜென்னைப்பற்றி முதன்முதலில் ஓஷோவின் நூல்களை மொழிபெயர்க்கும் பொழுதுதான், அறிந்து கொண்டேன். அதனுடைய சுருக்கமான பளிச்சென்ற கருத்துகள் என்னை மிகவும் கவர்ந்தன. ஜென்னை முதன்முதலில் இந்தியாவில் பரவலாகப் படரவிட்டவர் ஓஷோ தான். ஆகவே, இதை ஓஷோவுக்கே மிகப் பணிவன்போடு சமர்ப்பிக்கிறேன்.
இதில் சில கதைகளின் கருத்துக்கள் மறைமுகமாக இருக்கும். அதனை, அங்கங்கே தெளிவுபடுத்தியிருக்கிறேன். மேலும், ஒவ்வொரு கதைக்கும் கீழே, சற்றுப் பொருத்தமான ஓஷோவின் கருத்துக்களையும் கொடுத்திருக்கிறேன்.
ஆகவே, வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துகளைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Reviews
There are no reviews yet.