எனக்கு ஏற்ற களத்தை, துறையை எப்படி நான் தெரிந்து கொளவது? மோதலும் போராட்டமும் நிறைந்ததாகத் தோன்றுகிற உலகத்தில் நானே சுயமாக என் வாழ்க்கைப் பயணத்தை எப்படித் தொடங்குவது? என் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும் உபயோகமானதாகவும் எப்படி அமைத்துக் கொள்வது? தொலைநோக்கு படைத்த நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் செல்லும் இடங்களிலெல்லாம் இப்படிப்பட்ட பல கேள்விகளை மாணவர்களும் இளம் தொழில்முறை நிபுணர்களும் அவரிடம் கேட்கிறார்கள். எனது வானின் ஞானச் சுடர்கள்: வாழ்க்கையின் குறிக்கோள் குறித்த உரையாடல், இந்த மாதிரியான பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது. டாக்டர் ஆ.பெ.ஜெ.அப்துல் கலாம்- அவருடைய நண்பரும் அக்னிச் சிறகுகள் இணையாசிரியருமான பேராசிரியர் அருண் கே.திவாரி- இவர்கள் இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் வடிவத்தில் படைக்கப்பட்டுள்ள இந்த நூல், வாழ்க்கையை ஆன்மிக அடிப்படையில் அணுகும் கலையைக் கற்றுத் தருகிறது. உலகமயமாக்கல் பற்றிய தம்பட்ட முழக்கங்கள்… மோதல்களின் அரங்கேற்றக் களமாக இந்த நூல் நிராகரிக்கிறது. இந்த பூமியின் பரிணாம வளர்ச்சிக்கு துணை நிற்பதை, தனது இறுதி இலக்காகவும் லட்சியமாகவும் மனித குலம் அமைத்துக் கொள்வது குறித்தும் இது விவரிக்கிறது. வரலாற்றில், மானுடத்தின் பல்வேறு நிகழ்வுகளைப் பரந்துபட்ட கண்ணோட்டத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல். இதன் அடிநாதமான கருத்தோட்டங்களுக்கு வாழும் உதாரணங்களாகத் திகழ்ந்து, இந்த பூமியில் வழிகாட்டிய சில ஞானச் சுடர்களின் மேன்மையையும் நமக்கு உணர்த்திக் காட்டுகிறது.
Reviews
There are no reviews yet.