முழுமையாய் வாழ
About the Book
“அலைபாயும் மனதின் அனாவசியக் கற்பனைதான் பயம். உங்கள் அச்சங்கள்
எப்போதுமே எதிர்காலம் பற்றியவை. பயத்தில் இருக்கிறபோது, இல்லாத ஒன்றை
எண்ணித்தான் நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இல்லாத ஒன்றை
எண்ணி நீங்கள் பயப்படுவது பைத்தியக்காரத்தனம் என்பது உங்களுக்குப்
புரிவதில்லை. உங்களுக்கிருக்கும் ஒரே ஆறுதல், பெரும்பாலானவர்கள
உங்களைப் போலவே இருக்கிறார்கள் என்பதுதான். பயத்தில் இருப்பவர்களைக்
கேட்கிறேன், அதிகபட்சமாக உங்களுக்கு என்ன நடந்துவிடும்? இறந்து போவீர்கள்,
அவ்வளவுதானே? எப்படியும் இறக்கத்தான் போகிறீர்கள். அதற்குள் வாழ்க்கையை
முழுமையாக வாழ்ந்து விடுங்களேன். அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்தால்
உங்கள் மரணமும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.” பயம் – பகையா பாதுகாப்பா’
என்ற கட்டுரையிலிருந்து
இந்தப் புத்தகத்தில் சுமார் 40 கட்டுரைகள் உள்ளன. ஈஷாவின் மாத இதழில்
தொடர்ந்து வெளிவந்து பாராட்டுகள் பெற்ற இக்கட்டுரைகள் வாசகர்களின்
வேண்டுகோளுக்கிணங்க இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
Reviews
There are no reviews yet.